சாரதி அனுமதிப்பத்திர செல்லுபடி காலத்தை மேலும் 03 மாதங்களுக்கு நீடிக்க நடவடிக்கை


காலாவதியான சாரதி அனுமதி பத்திரங்களின் செல்லுபடியாகும் கால எல்லையினை மேலும் மூன்று மாதங்களுக்கு நீடிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

இந்த விடயம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தற்போதைய நிலைமையினை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும்  மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களத்தின் வேரஹேர  மற்றும் நாரஹேன்பிட்டி அலுவலகங்களில் வழமையான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம மேலும் தெரிவித்துள்ளார்.

No comments: