நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்


நாட்டின் சில பகுதிகளில் இன்று 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதற்கமைய, வடக்கு, வட மத்திய, கிழக்கு மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலிய ஆகிய மாவட்டங்களிலும் மழைபெய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும், இடியுடன் கூடிய மழை மற்றும் காற்று வீசும் சந்தர்பங்களில் அனர்த்தங்களை தவிர்க்கும் வகையில் மக்கள் அவதானமாக செயற்படுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

No comments: