நாட்டின் சில பகுதிகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும்


நாட்டின் சில பகுதிகளில் இரவு வேளைகளில் 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, சப்ரகமுவ மாகாணத்திலும், கம்பஹா, கொழும்பு, ஹம்பாந்தோட்டை , மொனராகலை மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் இவ்வாறு 100 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், குறித்த பகுதிகளில், இடியுடன் கூடிய மழைபெய்யும் சந்தர்ப்பங்களில், அதிக மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, வடக்கு, கிழக்கு, வட மத்திய மற்றும் மத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அடிக்கடி, மழை அல்லது இடியுடன் கூடிய மழைபெய்யக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதுதவிர, மேல், வட மேல் மற்றும் வடக்கு மாகாணங்களின் சில பகுதிகளில், 75 மில்லிமீற்றர் வரையான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில், தற்காலிகமாக ஏற்படும் காற்று மற்றும் மின்னல் தாக்கங்களில் இருந்து, தம்மைப் பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு உரிய நடவடிக்கைளை மேற்கொள்ளுமாறு, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அத்துடன், இவ்வாறான சந்தர்ப்பங்களில் வெட்டவெளியான இடங்களிலோ, மரங்களுக்கு கீழோ இருக்க வேண்டாம் என, பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வயல்வெளிகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட திறந்த இடங்களில் இருப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்துடன், துவிச்சக்கர வண்டி, Tractor மற்றும் படகு போன்றவற்றில் பயணிப்பதை தவிர்த்துக் கொள்றுமாறும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments: