பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு திகதி நாளை வரை நீடிப்பு


பல்கலைக்கழகங்களில் புதிய மாணவர்களுக்கான பதிவு செய்வதற்கான திகதியை நாளை வரை நீடித்துள்ளதாகப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 

ஒன்லைன் முறையில் மாத்திரம் பதிவு செய்யக் கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

அது தொடர்பான அறிவித்தலைப் பல்கலைக்கழக மானிய ஆணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

கடந்த 2019 – 2020 புதிய கல்வியாண்டில் சுமார் 41ஆயிரத்து 500 மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் அனுமதிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

No comments: