குருநாகலை முதல் தம்புள்ளை வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பம் - பிரதமர்
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகலை முதல் தம்புள்ளை வரையிலான வீதி நிர்மாணப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பொத்துஹேர முதல் கலகெதர வரையிலான மூன்றாம் கட்ட நிர்மாணப் பணிகள் அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
இந்த நிலையில், 2015 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் திட்டமிட்டு தாமதப்படுத்தப்பட்டதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான அரசாங்கம் குறித்த காலப்பகுதியில் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் நிர்மாணப் பணிகள் உள்ளிட்ட பல வேலைத்திட்டங்களை நிறுத்தியதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், முன்னதாக மத்திய அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தால், தம்புள்ளை அதிவேக நெடுஞ்சாலை நிர்மாணப் பணிகள் தற்போது நிறைவடைந்திருக்கும் எனவும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
No comments: