கொரோனா பரவல் - கொண்டாட்டங்களையும் விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு கோரிக்கை


பண்டிகைக் காலத்தில் முடிந்த அளவுக்கு கொண்டாட்டங்களையும் விருந்துபசாரங்களையும் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

பண்டிகைக் காலத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று பரவுகின்ற அபாயம் அதிகமாக காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனவே ஒன்று கூடுவது, உறவினர்களின் வீடுகளுக்குச் செல்வது, விருந்துபசாரங்கள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என அவர் கோரியுள்ளார்.

மேலும் கூடுமானவரையில் தனிமைப்படுத்தல் விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அஜித் ரோஹன கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments: