குழந்தைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் சந்தேக நபர் கைது - விசேட விசாரணைகள் ஆரம்பம்
குழந்தைகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பில், விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில், மாத்தளை உக்குவளை பகுதியைச் சேர்ந்த 47 வயதான சந்தேநபர் ஒருவர், மொரட்டுவைப் பகுதியில் , சிறுவர் மற்றும் மகளிர் பிரிவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
குறித்த நபர், அநாதரவான கர்ப்பிணிப் பெண்களுடன் ஒப்பந்தமிட்டு, அவர்களின் சிசுக்களை மூன்றாந் தரப்புக்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அத்துடன், குறித்த நபர் 30 சிசுக்களை விற்பனை செய்துள்ளதாகவும், அதனுடன் தொடர்புடைய 12 பெண்களை அடையாளம் கண்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையிலேயே, இது தொடர்பில் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: