இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்


இன்று அதிகாலை 05 மணி முதல் கொழும்பு மாவட்டத்தில் வெல்லம்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாலமுல்ல கிராம சேவையாளர் பிரிவு, வௌ்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சஷேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொழும்பு மாவட்டத்தில் மோதர, கொட்டாஞ்சேனை, கிராண்ட்பாஸ், ஆட்டுப்பட்டி தெரு, டாம் வீதி , வாழைத் தோட்டம், மாலி காவத்தை, தெமட்ட கொடை மற்றும் மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி , கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வேகந்த கிராம சேவகர் பிரிவு, பொரளை பொ லிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகள் வனாத்தமுல்லை கிராம சேவகர் பிரிவும், வெல்லம்பிட்டி – லக்சந்த செவன வீட்டுத் திட்டம் மற்றும் மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி பேர்கசன் பாதை தெற்கு பகுதி மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.

கொம்பனி வீதி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹுணுப் பிட்டிய கிராம சேவையாளர் பிரிவு, கறுவாத்தோட்டம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 60 ஆம் தோட்டம், வெள்ளத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயுரா பகுதி, வெள்ளவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நஃபீர்வத்தை மற்றும் மிரி ஹான பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தமிழ்நாடு ஆகிய பகுதிகள் மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தல் தொடரும் என தெரிவிக்கப்படுகின்றது.


 

No comments: