அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தவிசாளருக்கு கொரோனா
பொகவந்தலாவ நிரூபர் சதிஸ்
அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துல பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இம்மாதம் 09ஆம் திகதி (09.12.2020) டோன்பீல்ட் தோட்டத்தில் மரண
வீடொன்றுக்கு, கொழும்பிலிருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
வீடொன்றுக்கு, கொழும்பிலிருந்து வந்த பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது.
இந்த மரண வீட்டில் அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளர் உள்ளிட்ட 300 பேர் கலந்துக்கொண்டிருந்தாகவும் தலவாக்கலை லிந்துல பொது சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார்.
இதுத் தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், ''டோன்பீல்ட் தோட்டத்தில் மரண
வீட்டில் கலந்துக்கொண்டிருந்த 300 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
வீட்டில் கலந்துக்கொண்டிருந்த 300 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு அவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.
இதில் 5 வயது பிள்ளைக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. மரண வீட்டுக்குச் சென்றிருந்த அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளர் பி.சி.ஆர் பரிசோதனைகளை புறக்கணித்து வந்திருந்தார்.
பின்னர் 14ஆம் திகதி தனிமைப்படுத்தப்பட்டு அவருக்கு அன்றைய தினமே பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
எனினும் தனிமைப்படுத்தப்பட்டிருந்த அவர் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி பல்வேறு இடங்களுக்குச் சென்று வந்துள்ளார்.
குறிப்பாக கடந்த 18ஆம் திகதி (18.12.2020) வறுமை ஒழிப்பு, பொருளாதரப் புத்தெழுச்சிக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில்
ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் அவர்
கலந்துக்கொண்டுள்ளார்.
ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற நிகழ்வொன்றிலும் அவர்
கலந்துக்கொண்டுள்ளார்.
இந்தநிலையில் அவரது பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் நேற்று (20.12.2020)
வெளியானது. இதில் அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளருக்குக்
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெளியானது. இதில் அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளருக்குக்
கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தவிசாளரின் குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இன்று (21.12.2020) அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளரை, கொரோனா வைரஸ் சிகிச்சையளிக்கும் நிலையத்துக்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது..” என்றார்.
கண்டியில் பசில் ராஜபக்ஷ தலைமையிலான நடைபெற்ற நிகழ்வில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான அக்கரப்பத்தனை பிரதேசசபையின் தவிசாளர் கலந்துக்கொண்டிருந்த நிலையில், இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் உள்ளிட்ட அமைச்சர்கள் பலரும், மத்திய மாகாணத்தில் உள்ள அனைத்துப் பிரதேச சபைகளின் தவிசாளர்களும் குறித்த நிகழ்வில்
கலந்துக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கலந்துக்கொண்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை அக்கரப்பத்தனை பிரதேசசபை தற்காலிகமாக மூடப்பட உள்ளது.
நுவரெலியா, நோர்வூட், கொட்டகலை, மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளின் தலைவரகள் 14 நாட்களுக்கு சுயதனிமைபடுத்தபட உள்ளதோடு தனிமைபடுத்தல் சட்டத்திட்டங்களை மீறிய அக்கரபத்தனை பிரதேச சபை திவிசாளருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக தலவாக்கலை லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

No comments: