ஹட்டன்- டிக்கோயா நகரசபையின் உறுப்பினர்களுக்கு தொற்று இல்லை
க.கிஷாந்தன்
ஹட்டன் - டிக்கோயா நகரசபையின் தலைவர், உபதலைவர் உள்ளிட்ட உறுப்பினர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாக, அட்டன்-டிக்கோயா நகரசபையின் பொதுசுகாதார பரிசோதகர் இராமையா பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நேற்று (27.12.2020) இரவு வெளியான பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையிலேயே தொற்று இல்லை என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
மேற்படி நகரசபையின் உறுப்பினருக்கு ஒருவருக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டதையடுத்து, அவருடன் நிகழ்வொன்றில் கலந்துகொண்ட நகரசபையின் ஏனைய உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கையின் முடிவுகள் வெளியான நிலையில், அவர்களுக்கு தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
No comments: