ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் விசேட மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெறவுள்ளது.
கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 6.30 மணியளவில் கட்சியின் தலைமையகத்தில் இந்த கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
சுதந்திரக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் மற்றும் தற்போதைய அரசியல் நிலைமை குறித்து இதன்போது ஆராயப்படவுள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உப தலைவர், பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
மேலும் கட்சியின் மறுசீரமைப்பு தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
No comments: