என்டிஜன் பரிசோதனை - நேற்றைய தினம் 13 பேர் தொற்றாளர்களாக அடையாளம்


நேற்றைய தினம் மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையில் 13 பேர் கொரோனா தொற்றாளர்காளக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் ஏழுமாற்றாக என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

அதன்படி மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் 11 இடங்களில் ஏழுமாற்றாக மேற்கொண்ட பரிசோதனைகளில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் கொழும்பு காலிமுகத்திடல் பகுதியில் மேற்கொண்ட என்டிஜன் பரிசோதனையில் 9 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அதன்படி கடந்த 18ம் திகதி முதல் இன்று காலை 06 மணி வரை மேற்கொண்ட பரிசோதனைகளின் மொத்த எண்ணிக்கை 10,986 ஆக அதிகரித்துள்ளது.

எதிர்வரும் 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் திகதி வரை என்டிஜன் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

No comments: