நாடு திரும்பிய இலங்கையர்கள்


கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வௌிநாடுகளில் சிக்கியிருந்த 195 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து 150 பேரும், இந்தியாவில் இருந்து 18 பேரும், கட்டாரில் இருந்து 16 பேரும் இவ்வாறு வருகை தந்துள்ளனர்.

அத்துடன் மாலைத்தீவில் இருந்து 5 பேரும் பாகிஸ்தானில் இருந்து நான்கு பேரும் மற்றும் சௌதி அரேபியாவில் இருந்து இருவரும் வருகை தந்துள்ளனர்.

இவர்கள் அனைவரும் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு தனிமைப்படுத்தல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: