திருக்கோவில் பிரதேசத்தில் வீடுடைத்து கொள்ளையில் ஈடுபட்ட இரு இளைஞர்களுக்கு விளக்கமறியல்

க.சரவணன்


திருக்கோவில் பிரதேசத்தில் நீண்ட காலமாக வீடுகளை உடைத்து பல கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட  18 , 19 வயதுடைய இளைஞர்கள் இருவரையும் எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று ஞாயிற்றுக்கிழமை (27) உத்தரவிட்டார்.

கடந்த 6 மாதம், இந்த மாதம்  பகுதிகளில் திருக்கோவில் பிரதேசத்தில் இரு வீடுகளை உடைத்து  கொள்ளையிடப்பட்டது இதில் ஒருவீட்டில் இருந்து  60 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கநகையும். 27 ஆயிரம் ரூபா பணமும்  இரண்டாவது வீட்டில் 40 ஆயிரம் ரூபா பெறுமதியான தங்கநகையும்  கொள்ளையிடப்பட்டது.

இக்கொள்ளை தொடர்பாக பொலிஸார் மேற்கொண்டு வந்த விசாரணையில் சின்னத் தோட்டத்தைச் சேர்ந்த 18, 19 வயது இளைஞர்களை கைது செய்தனர்.  இதில் கொள்ளையிடப்பட்ட 60 ஆயிரம் ரூபா தங்கநகையும் 17 ஆயிரம் ரூபா பணத்தையும் மீட்டதுடன் கைது செய்த இருவரையும் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 7ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை கைது செய்யப்பட்ட ஒருவர் ஏற்கனவே கொள்ளை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு 5 வருடம் ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை நீதிமன்றினால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: