நாட்டில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்குள்ளானவர்கள் பற்றிய விபரம்


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 592 பேர் நேற்றைய நாளில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கொவிட் 19 தொற்று பரவலை தடுப்பதற்கான தேசிய செயலணியின் தலைவரும் இராணுவ தளபதியுமான ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் பேலியகொடை கொத்தணியுடன்   தொடர்புடைய 470 பேரும் ,சிறைச்சாலைகளுடன் தொடர்புடைய 18 பேரும் அடங்குவதாக  இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் நேற்றைய தினம் நாடு திரும்பிய நான்கு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறிப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 39,231 ஆக அதிகரித்துள்ளது.

மேலும்,கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 686 பேர் நேற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 30,568 ஆக அதிகரித்துள்ளதென சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 8,478 பேர் தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 185 ஆக அதிகரித்துள்ளது.


No comments: