நாட்டில் மேலும் ஒரு கொரோனா மரணம் பதிவு


கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒரு உயிரிழப்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்படி, களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரே  உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், கடந்த 21 ஆம் திகதி தமது வீட்டிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தொற்று மற்றும் இரத்தம் விசமடைதல், புற்றுநோய் காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 184  ஆக அதிகரித்துள்ளது.

No comments: