ஹட்டன் ஆரியகம பகுதியில் தீ விபத்து - ஒருவர் பலி

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


ஹட்டன் ஆரியகம பகுதியில் வீடு ஒன்று தீப்பற்றியதில் வீட்டில்

இருந்த குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹட்டன் பொலிஸார்
தெரிவித்தனர். 

இந்த சம்பவம் 24.12.2020 வியாழக்கிழமை மாலை வேலையில் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர் 74 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை எனவும் ,ஒய்வு பெற்ற  ஆசிரியர்  எனவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

குறித்த குடும்பத்தில் உள்ளவர்கள் நத்தார் பண்டிகையினை முன்னிட்டு பொருட்கள் கொள்வனவு செய்வதற்காக ஹட்டன் நகரத்திற்கு சென்றிருந்த வேளையிலே குறித்த சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,பிரதேச மக்கள் தீயினை கட்டுபாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்தபோதும் அது பயனளிக்கவில்லை என்பதுடன்,
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments: