சிவனொளிபாதமலை யாத்திரை தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
சிவனொளிபாதமலை பருவகால யாத்திரை நாளை ஆரம்பமாகவுள்ளது.
இதன்படி புனித சின்னங்களை எடுத்துச்செல்லும் நிகழ்வு இன்று இடம்பெறவுள்ளதுடன் நாளை வருடாந்த யாத்திரை ஆரம்பமாகவுள்ளதென சிவனொளிபாதமலையின் விஹாராதிபதி பெங்கமுவே தம்மதித்த தேரர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுள் ஒரே தடவையில் 200 பேருக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள் தத்தமது பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை என்பதைனை பொது சுகாதார பரிசோதகர்களினால் உறுதிப்படுத்தப்பட்ட அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை எதிர்வரும் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்பதை தவிர்த்து செயற்படுமாறு நுவரெலியா மாவட்ட செயலகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments: