அக்கரப்பத்தனை பிரதேச சபைத் தலைவருக்கு இரண்டாவது தடவையாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலும் கொரோனா தொற்று உறுதி!
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
கொரோனா தொற்றாளராக அடையாளம் காணப்பட்ட அக்கரபத்தனை பிரதேச சபை தலைவருக்கு இரண்டாவது தடவையாக மேற்கொண்ட பி.சி.ஆர் பரிசோதனையிலும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை லிந்துலை பொது சுகாதார பரிசோதகர்
தெரிவித்தார்.
இந்நிலையில் இவர் சுயதனிமைப்படுத்தப்பட்ட காலப்பகுதியில் கண்டி,தலவாக்கலை
பகுதிகளில் இடம்பெற்ற அரச கூட்டங்களில் கலந்துக் கொண்டுள்ளமை
தெரியவந்துள்ளது .
தொற்றாளர் கலந்துகொண்ட கூட்டங்களில் பங்கேற்ற அட்டன் டிக்கோயா
நகரசபை,தலவாக்கலை லிந்துலை நகரசபை, கொட்டகலை,நோர்வூட்,மஸ்கெலியா,மற்
நுவரெலியா பிரதேச சபைகளின் தலைவர்கள் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் .
அத்துடன்,அம்பகமுவ பிரதேச செயலகத்தில் இன்றைய தினம் இடம்பெறவிருந்த அபிவிருத்திக் குழு கூட்டம் இடைநிறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments: