மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் துரித அன்டிஜன் பரிசோதனை முன்னெடுப்பு


மேல் மாகாணத்தை விட்டு வௌியேறுபவர்களுக்கு தொடர்ந்தும் துரித அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்வதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் குறித்த பரிசோதனைகளின் ஊடாக 5 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி இருந்தமை இனங்காணப்பட்டிருந்தது.

அதனடிப்படையில் இதுவரையில் குறித்த பரிசோதனை ஊடக 54 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 18ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இந்த நடவடிக்கை ஊடாக இதுவரையில் 8600 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments: