திருகோணமலையில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை


திருகோணமலையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 9 கொரோனா தொற்றாளர்கள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதற்கமைய , திருகோணமலையில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 113 ஆக அதிகரித்துள்ளது.

இதன்படி, மூதூரில் 2 தொற்றாளர்களும், திருகோணமலையில் 7 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டுள்ளனர்.

அத்துடன், இதுவரை திருகோணமலையில் 64 பேரும், மூதூரில் 27 பேரும், கோமரங்கடவல பகுதியில் ஒருவரும், கிண்ணியாவில் 8 பேரும், குச்சவெளி பகுதியில் ஒருவரும், தம்பலகாமன் பகுதியில் 6 பேரும், உப்புவெளி பகுதியில் 3 பேரும்  அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: