நாட்டில் கொரோனா தொற்று - உயிரிழப்பு 186 ஆக பதிவு
நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 186 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் உயிரிழந்த நிலையிலே இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, அக்கறைபற்று பிரதேசத்தைச் சேர்ந்த 54 வயதுடைய ஆண் ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர், அக்கறைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த நபர் கடந்த 24 ஆம் திகதி வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார பணிப்பாளர் நாயகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளதாக அரசாங்கம் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்று காரணமாகவே குறித்த நபர் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 551 பேர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில், பேலியகொடை கொரோனா கொத்தணியியுடன் தொடர்புடைய 541 பேரும், சிறைச்சாலை கைதிகள் 10 பேரும் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 39,872 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், நாட்டில் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 31,339 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கொரோனா தொற்றுக்குள்ளான 8,579 தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments: