கல்முனை வடக்கில் சுகாதார ஊழியர்கள் மூவருக்கு கொரோனா தொற்று

செ.துஜியந்தன்


கல்முனை வடக்கு பிராந்திய சுகாதாரபணிமனையில் கடையாற்றும் மூவர் இன்று(26) கொரோனா தொற்றுக்குள்ளாகி இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பணிமனை எதிர்வரும் செவ்வாய்க்கிழமை வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.


கல்முனை வடக்கு பணிமனையில் கடமையாற்றும் ஊழியர்கள் 25 பேருக்கு இன்று(26) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் போது சாரதி ஒருவரும் இரு மருத்துவமாதுக்களும் கொரோனா தொற்றுக்குள்ளாகியிருப்பது உறுதியாகியுள்ளது. 

அத்துடன் பெரியகல்லாற்றுக்கு பிரத்தியோக வகுப்புக்குச் சென்றுவந்த மாணவி ஒருவருக்கும் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நான்கு பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக சுகாதாரப் பணிமனை தெரிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து அப்பணிமனை செவ்வாய்க்கிழமை வரை மூடப்பட்டுள்ளதாகவும், செவ்வாய்க்கிழமை மீண்டும் இரண்டாவது கட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அதுவரை பணிமனை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments: