சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
பொகவந்தலாவ தெரேசியா தோட்டப்பகுதியில் உள்ள கால்நடைகளுக்கு புல் அறுக்கும் நிலத்தில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு சந்தேக நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இந்த கைது சம்பவமானது 25.12.2020.வெள்ளிக்கிழமை இரவு 10 மணியளவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவிவத்தனர்.
பொகவந்தலாவ பொலிஸாரினால் மேற்கொள்ளபட்ட சுற்றிவளைப்பின் போது குறித்த ஆறுசந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டதோடு மாணிக்ககல் அகழ்விற்கு
பயன்படுத்தபட்ட நீர் இரைக்கும் இயந்திரம், நீர் குழாய், மண்வெட்டி மற்றும்
வயர் போன்றன மீட்கப்பட்டுள்ளது.
மேலும் கைது செய்யப்பட்டவர்கள் தெரேசியா தோட்டப்பகுதியை சேர்ந்த 50,40,25,30 போன்ற வயதுகளை கொண்டவர்கள் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பொலிஸாரினால் பிணை
வழங்கப்பட்டுள்ளதோடு எதிர் வரும் செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் நிதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு பொலிஸாரினால் பிணை
வழங்கப்பட்டுள்ளதோடு எதிர் வரும் செவ்வாய்க்கிழமை ஹட்டன் நீதவான் நிதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments: