மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோருக்கு இன்றும் அன்டிஜன் பரிசோதனை


மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுவோர் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் ரெபின் அன்டிஜன் பரிசோதனைகள் இன்றும் மேற்கொள்ளப்படவுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில் கொழும்பு - புத்தளம் மார்க்கத்தில் கொச்சிக்கடை பிரதேசத்திலும்,ஹைலெவல் மார்க்கத்தில் சாலாவ பிரதேசத்திலம்,கண்டி வீதியில் நிட்டம்புவ பிரதேசத்திலும் இக்குறித்த பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று ஆரம்பமான இந்நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 451 பேருக்கு இப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதோடு அதில் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து மேலும் 2 வாரங்களுக்கு ரெபிட் அன்டிஜன் பரிசோதனைகைளை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

No comments: