நாடு திரும்பிய இலங்கையர்கள்
கடந்த 24 மணிநேர காலப்பகுதிற்குள், 9 விமானங்கள் ஊடாக 306 இலங்கையர்கள் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
கொரோனா தொற்றுப்பரவல் காரணமாக வெளிநாடுகளில் நிர்கதிக்குள்ளாகியிருந்த இலங்கையர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர்.
இதன்படி, ஓமானின் மஸ்கட் நகரில் இருந்து 51 பேரும், கட்டாரின் டோஹா நகரில் இருந்து 31 பேரும், ஜப்பானின் நரீட்டா நகரில் இருந்து 83 பேரும், டுபாயில் இருந்து 131 பேரும் இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு நாட்டை வந்தடைந்துள்ள அனைவருக்கும் பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

No comments: