விமான நிலையங்கள் மீண்டும் திறப்பு - நாட்டுக்கு முதலில் வருகை தர ரஷ்ய சுற்றுலா குழுவொன்றுக்கு அனுமதி


இலங்கையில் விமான நிலையங்கள் மீண்டும் திறக்கப்பட்டதன் பின்னர், நாட்டுக்கு முதலில் வருகை தருவதற்கு, ரஷ்ய சுற்றுலா குழுவொன்றுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்கவே, இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டதாக, சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ தெரிவித்துள்ளார்.

இதன்படி, சுமார் 26 பயணிகள், எதிர்வரும் 26 ஆம் திகதி மத்தளை விமான நிலையத்தை வந்தடையவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் நாட்டுக்கு வருகை தந்ததன் பின்னர், மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, விமான நிலைய அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படப்பட்டு வருவதாக, உபுல் தர்மதாஸ குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அவர்களுக்கு PCR பரிசோதனைகளை மேற்கொண்டு, தங்குமிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளை வழங்குவதங்கு, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்

இதேவேளை, எதிர்வரும் 26 ஆம் திகதிக்குப் பின்னர், வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள், வெளிவிவகார அமைச்சின் அனுமதியின்றி நாட்டுக்கு வருகை தர முடியும் எனவும், சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் தலைவர் உபுல் தர்மதாஸ மேலும் குறிப்பிட்டுள்ளார்.

No comments: