தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ள செய்தி


தேர்தல் வாக்களிப்பு பொறிமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதாக   தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள், ஊகவியலாளர்கள், தேர்தல் காலங்களில்  அத்தியாவசிய கடமைகளில் ஈடுபடுபவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சைப்பெறுபவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வாக்களிப்பில் பங்கேற்பது தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை விவகாரம் தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிப்பதற்கு  பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய எதிர்வரும் ஜனவரி மாதமளவில் குறித்த விசேட பொறிமுறை தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய தேர்தல் முறைமையில் திருத்தம் மேற்கொள்ளப்படுவதுடன் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஊடாக சட்டம் இயற்றும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல்புஞ்சிஹேவா மேலும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: