மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கடந்த 5 நாட்களில் 400 சாரதிகள் கைது


மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றச்சாட்டில் கடந்த 5 நாட்களில் 400 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் கடந்த 20ம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விசேட திட்டத்தில் சுமார் ஒன்பதாயிரம் பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பிரதிபபொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை நாடளாவிய ரீதியில் கடந்த 24 மணிநேரத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் ஐவர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 30 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: