விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை பிற்போடப்பட்டுள்ளது


சுற்றுலாப்பயணிகளுக்காக விமான நிலையத்தை திறக்கும் நடவடிக்கை  பிற்போடப்பட்டுள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாளை முதல் சுற்றுலாப்பயணிகளின் வருகை நிமித்தம்  கட்டுநாயக்க விமான நிலையம் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

இதேவேளை நாளையதினம் 300 க்கும் மேற்பட்ட ரஷ்ய சுற்றுலா குழுவினர் நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு முன்னதாக அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குறித்த குழுவினரை அழைத்துவரும் நடவடிக்கை எதிர்வரும் 31ம் திகதிவரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் ஐரோப்பிய நாடுகளில் தற்போது  ஏற்பட்டுள்ள புதியவகை வைரஸ் பரவல் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும்  விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments: