சம்மாந்துறையில் கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும் "இலக்கியம்” நினைவு மலர் வெளியீடும்

எஸ்.அஷ்ரப்கான்


சம்மாந்துறைப் பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும்  இணைந்து நடாத்திய கலை இலக்கியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கும்  நிகழ்வும் "இலக்கியம்” எனும் நினைவு மலர் வெளியீடும் நேற்று (30) சம்மாந்துறை காலாசார மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம் ஹனீபா தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர்  எம்.எம் ஆசிக், அம்பாரை மாவட்ட கலாசார உத்தியோகத்தகர் ரி.எம் றிம்சான், சம்மாந்துறை  கலாசார அதிகார சபை உப தலைவர் இலக்கியவாதி வைத்தியர் எம்.எம் நெளசாத், சம்மாந்துறை கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தகர் எம்.வை நெளஸானா  என பலரும் கலந்து கொண்டனர்.

சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் கலை,கலாச்சார மற்றும் இலக்கிய துறைகளில் நடாத்தப்பட் போட்டியிகளில் முதலாம், இரண்டாம், மூன்றாம் இடங்களை  பெற்ற மாணவர்களுக்கும் கலைஞர்களுக்கும் பரிசில்கள் மற்றும் நினைவுச்சின்னங்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

No comments: