கடலோரத்தில் கரையொதுங்கும் நன்னீர் மீன்கள்; திருக்கோவில் பிரதேச செயலகம் உடன் நடவடிக்கை
திருக்கோவில் பிரதேச செயலகப்பிரிவு கடல் கரைப்பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக நன்னீர் மீன்கள் இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.
தற்போது நாட்டில் பெய்து வரும் அடைமழை காரணமாக ,ஆலையடிவேம்பு,அக்கரைப்பற்று ,திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டது.
இதனையடுத்து அப்பகுதிகளில் உள்ள இரண்டு முகத்துவாரங்களும் (பெரிய முகத்துவாரம்,சின்ன முகத்துவாரம்) வெட்டிவிடப்பட்டது .
இதனால் நன்னீர் கடல் நீருடன் கலந்ததால் நன்னீர் மீன்கள் அதன் வழமையான சூழலை விட புதிய சூழலில் சென்றதனால் இறந்து இருக்கலாம் என சந்தேகக்கப்படுகின்றது.
இறந்த மீன்களை அகற்றும் பணிகள் திருக்கோவில் பிரதேச செயலாளர் T.கஜேந்திரன் அவர்களின் வழிகாட்டலின் கீழ் திருக்கோவில் பிரதேச செயலகம்,திருக்கோவில் முருகன் ஆலய நிறுவாகத்தினர் மற்றும் திருக்கோவில் பிரதேச சபை ஆகியோரின் உதவியுடன் இடம்பெற்றது.




No comments: