கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவான கொரோனா தொற்றாளர்கள் அடையாளம்


நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 594  பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்த நிலையில், கொழும்பு மாவட்டத்திலேயே அதிகளவானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதன்படி, கொழும்பு மாவட்டத்தில் நேற்றைய தினத்தில் 253  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றை தடுப்பதற்காக தேசிய செயலணி வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.

இதன்படி பொரளை பகுதியில்  62 பேரும்  கொம்பெனித்தெரு பகுதியில் 30 பேரும் கொட்டாஞ்சேனை பகுதியில்  27 பேரும்  மட்டக்குளி பகுதியில்  22 பேரும் கிராண்ட்பாஸ் பகுதியில்   18  பேரும் தெமட்டகொட பகுதியில் 17 பேரும்  புதுக்கடை பகுதியில் 12 பேரும்  கறுவாத்தோட்டம் பகுதியில் 11 பேரும்  கிருலப்பனை அவிஸ்ஸாவலை ஆகிய பகுதிகளில் 8 பேரும்  வெள்ளவத்தை பகுதியில்  7 பேரும் கொள்ளுப்பிட்டி பகுதியில்  ஐவரும்   நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன்  மருதானை, தெஹிவளை  மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில்   தலா மூவரும் கல்கிஸ்ஸை பகுதியில் ஏழு பேரும் நேற்றைய நாளில் தொற்றுடன் அடையாளங் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை கம்பஹா மாவட்டத்தில் நேற்று 124 பேருக்கு கொரோனா தொற்று  உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி றாகம பகுதியில் 30 பேரும்  வத்தளை பகுதியில் 24  பேரும் மஹர பகுதியில் 23 பேரும்  கட்டுநாயக்க பகுதியில் 7பேரும்  நிட்டம்புவ 6பேரும் நேற்று தொற்றுடன் தொற்றுக்குள்ளானமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவை தவிர  யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 156 பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 93 பேரும்  முல்லைத்தீவு மாவட்டத்தில் 74 பேரும்  பொலன்னறுலை மாவட்டத்தில்  73 பேரும்  மாத்தளை மாவட்டத்தில் 91 பேரும்  வவுனியா மாவட்டத்தில் 57 பேரும் மன்னார் மாவட்டத்தில் 16 பேரும்  பதுளை மாவட்டத்தில்  77 பேரும் கொரோனா தொற்றுக்குள்ளானமை நேற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.



No comments: