கடந்த 8 நாட்களில் 39 பேர் பலி


கடந்த 08 நாட்களில் இடம்பெற்ற  விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காலப்பகுதியில் 527 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.

இந்த விபத்துகளில் 122 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 238 பேர் சிறிய காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும்  பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

வருடாந்தம் டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி தொடக்கம் ஜனவரி 05 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் அதிகளவான விபத்துகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும்,வீதி விபத்துகளை கட்டுப்படுத்துவதற்காக நாடளாவிய ரீதியில் நடமாடும் பொலிஸ் சோதனைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண இதன்போது தெரிவித்துள்ளார்.

No comments: