ஒன்றரை வயது சிசு உட்பட 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்
கொட்டகலை சுகாதார அதிகாரி பிரிவில் ஒன்றரை வயது சிசு உட்பட ஏழு பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கொட்டகலை பொது சுகாதார பரிசோதகர் எஸ்.சௌந்தர்ராகவன் தெரிவித்தார்.
கடந்த 23 ஆம் திகதி கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி
அதிகாரப் பகுதிக்குட்பட்ட பகுதியில் 06 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர்
பரிசோதனையின் அறிக்கை இன்று (26/12/2020) மாலை வெளியாகியது.
குறித்த அறிக்கையில் 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தலவாக்கலை கூமூட் தோட்டத்தில் ஒன்றரை வயது ஆண் சிசு உட்பட 35 வயதுடைய பெண் மற்றும் 20 வயது இளைஞன் ஒருவருக்கும், தலவாக்கலை ஒலிரூட் தோட்டத்தில் 56 வயதுடைய ஆண் ஒருவருக்கும், கொட்டகலை டிரைட்டன் கே.ஒ பிரிவில் 59 வயதுடைய பெண் ஒருவருக்கும், டிரைட்டன் டீ.டி பிரிவில் 20 வயதுடைய பெண் ஒருவருக்கும், டெரிகிளேயர் தோட்டத்தில் 37 வயதுடைய ஆண் ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் , கடந்த ஒக்டோபர் மாதம் முதல் இதுவரையில் கொட்டகலை சுகாதார
வைத்திய அதிகாரி காரியாலய அதிகாரப்பகுதியில் 44 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
குறித்த 07 தொற்றாளர்களையும் சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
No comments: