அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் சுனாமி அனர்த்த நினைவேந்தல்


கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ம் திகதி நாட்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தம் காரணமாக நாட்டின் கரையோரப் பகுதிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் அம்பாரை மாவட்ட கரேயார மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தனர் .

உறவுகள், குடியிருப்புக்கள் என பலவற்றை இழந்து குடியேற்ற பிரதேசங்களில் கடந்தகால வடுக்களுடன் பாதிக்கப்பட்ட மக்கள் இன்றும் வாழ்ந்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், திருக்கோவில், ஆலையடிவேம்பு. அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, காரைதீவு. கல்முனை. உள்ளிட்ட பிரதேச செயலாளர் பிதேச செயலாளர் பிரிவுகள் அதிகளவு பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தம்பட்டை , தம்பிலுவில், திருக்கோவில். பிரதேசங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த பிரதேசங்களில் சுனாமி அனர்த்தினால் ஏற்பட்ட பாதிப்புக்களின் எச்சங்கள் (கட்டிட சிதைவுகள்) தற்போதும் காணப்படுகின்றது.  

சுனாமிக்கு பின்னர் திருக்கோவில் பிரதேசத்தில் பாதிக்கப்பட் கரையோரப் பகுதிகள் சில  சுனாமி வலையமாக அறிவிக்கப்பட்டதனையடுத்து குறித்த பகுதிகளில் மக்கள் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில்  சுனாமி அனர்த்ததினால் 4445 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 432 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வானது காலை 09 மணியளவில் இடம் பெற்றது இந் நிகழ்வானது கொவிட் 19 சுகாதார நடைமுறைகளுக்கு ஏற்ப நடை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது 

குறைவான, மட்டுப்படுத்தப்பட்ட சனத்தொகையினரே குறித்த அஞ்சலி நிகழ்வில் பங்கு பற்றியிருந்தனர். இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.வி.ஜெகதீசன், திருக்கோவில் பிரதேச செயலாளர் திரு.த.கஜேந்திரம் மற்றும் மாவட்ட அனர்த்தமுகாமைத்துவ நிலைய உதவிப்பளிப்பாளர் , உயிரிழந்த உறவினர்கள் உள்ளிட்டவர்கள் பங்குபற்றியிருந்தனர். 


No comments: