சிறைச்சாலைகள் கொத்தணியில் இதுவரை 3,579 பேருக்கு கொரோனா தொற்று
சிறைச்சாலைகள் கொத்தணியில் இதுவரை 3,579 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த 24 மணித்தியாலங்களில் மாத்திரம் சிறைச்சாலை கொத்தணியில் 141 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புதிய மெகசின் சிறைச்சாலையிலிருந்தே அதிகளவான நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
மெகசின் சிறைச்சாலையில் இதுவரை 822 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலையில் 810 பேருக்கும் மஹர சிறைச்சாலையில் 735 பேருக்கும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் 389 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் அதிகாரிகள் 116 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments: