வட்டவளை ஆடைத் தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா தொற்று

பொகவந்தலாவ நிருபர் எஸ்.சதீஸ்


வட்டவளை  ஆடைத்தொழிற்சாலையில் மேலும் 28 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்பகமுவ பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

வட்டவளை ஆடைத் தொழிற்சாலை ஊழியர்கள் 10  பேருக்கு நேற்றைய தினம் தொற்று
உறுதி செய்யப்பட்டதையடுத்து மேலும் 450 பேருக்கு அன்டிஜன் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது. 

இதனடிப்படையில் இன்று (25/12/2020) கிடைக்கப்பெற்ற
அறிக்கையில் மேலும் 28 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், 21 பெண்களும் 7 ஆண்களும் அடங்குவதுடன், தொற்றுக்குள்ளானவர்களில் அம்பகமுவ பிரதேச செயலகத்தைச் சேர்ந்தவர்களே அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 14 ஆம் திகதி வட்டவளை ஆடைத்தொழிற்சாலையில் வேலை செய்த மவுண்ட்ஜின்
தோட்டத்தை சேர்ந்த இளைஞன் ஒருவருக்கு தொற்று உறுதியானதையடுத்து  அவரோடு
தொடர்பை பேணிய 60 பேருக்கு கடந்த 17 ஆம் திகதி பி.சி.ஆர் பரிசோதனை
மேற்கொள்ளப்பட்டது.

இதுவரையில் குறித்த ஆடைத்தொழிற்சாலையில் 39 பேர் தொற்றாளர்களாக அடையாளம்
காணப்பட்டுள்ளனர்.

இன்று அடையாளம் காணப்பட்டவர்களை சுயதனிமை மத்திய நிலையத்திற்கு அனுப்பி
வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

No comments: