என்டிஜன் பரிசோதனை - நேற்றைய தினம் 16 பேருக்கு கொரோனா தொற்று


மேல் மாகாணத்திலிருந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான 11 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனைகளில் மேலும் 16 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 940 பேரிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அதன்படி, டிசம்பர் மாதம் 18ம் திகதி தொடக்கம் இதுவரை மேல் மாகாணத்தில் இருந்து வௌியேற முற்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட உடனடி என்டிஜன் பரிசோதனையில் 90 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

No comments: