09 பிரிவுகள் தொடர்ந்து தனிமைப்படுத்தலில் ; சிகையலங்கார நிலைங்கள் மூடப்படுகின்றது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை , ஆலையடிவேம்பு ஆகிய பிரதேசங்களில் உள்ள சிகையலங்கார நிலயங்களை உடன் அமுலுக்கு வரும் வகையில் மூடுமாறு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ் அகிலன் உத்தரவிட்டுள்ளார் .

இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.அகிலன்

நேற்றைய தினம் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட Antigen பரிசோதனையில் புதிய தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதனையடுத்து குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அத்துடன் ஆலையடிவேம்பு பிரதேசத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 24 ஆக அதிகரிப்பு.

மேலும் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதி 09 பிரதேசங்கள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments: