இன்று நாடு திரும்பிய இலங்கையர்கள்

கொரோனா தொற்றுப்  பரவல் காரணமாக ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து நாடு திரும்ப முடியாமல் இருந்த மேலும் 420 இலங்கையர்கள் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் கட்டாரில் இருந்து 43 பேர் இலங்கை வந்திருந்த நிலையில் இதில் 27 பேர் இலங்கையர்களாவர்.ஏனைய 16 பேரும் கட்டாரில் இருந்து இலங்கை வந்த துாதரக அதிகாரிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றுக் காரணமாக சீனாவில் சிக்கியிருந்த 112 பேரும் இன்று அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

குறித்த அனைவரும் தற்போது பி.சி.ஆர்.பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதோடு,இவர்களை தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments: