மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் பலர் கைது
மேல் மாகாணத்தில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் இன்று காலை 5 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்தில் போதை பொருட்களுடன் சுமார் 400 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.386 சுற்றிவளைப்புகளில் 160 கிராம் 758 மில்லி கிராம் பெறுமதியான ஹெரோயின், 274 கிராம் 377 மில்லி கிராம் பெறுமதியான கஞ்சா போதைப் பொருள் மற்றும் 518 கிராம், 517 மில்லி கிராம் ஐஸ் வகை போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் சந்தேக நபர்கள் பம்பலப்பிட்டி, நீர்க்கொழும்பு, மோதர, பாணந்துறை, மருதானை மற்றும் சபுகஸ்கந்த ஆகிய இடங்களில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, 20 கிராம் ஹெரோயின் மற்றும் 1538 போதைப் பொருள் மாத்திரைகளுடன் வாழைச்சேனை பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: