மடக்கும்புரவில் தொடரும் சிறுத்தைகளின் அட்டகாசம-இன்று மாடு ஒன்று இரையானது
மடக்கும்புர பகுதியில் சிறுத்தைகளின் நடமாட்டம் சமீபகாலமாக அதிகரித்துள்ளதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
காட்டெருமைகள் அதிகம் காணப்படுவதால் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகமாக காணப்படுவதாக குறிப்பிடுவதோடு இன்றைய தினம் மாடு ஒன்றை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இன்று அதிகாலை வளர்ப்பு மாட்டொன்றை சிறுத்தை வேட்டையாடியுள்ளதோடு சிறுத்தை சென்றதற்கான கால்தடங்களும் காணப்பட்டுள்ளது.
மேலும் இதுவரை காலமும் காட்டெறுமையை மாத்திரம் வேட்டையாடிய சிறுத்தைகள் இன்று வளர்ப்பு மாடுகளையும் வீடு தேடி வந்து இரையாக்கியுள்ளமை மக்களிடத்தே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கது.

No comments: