நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
நேற்றைய தினம் மஹியங்கனைப் பகுதியில் மகாவலி கங்கைக்கு நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
குருநாகலையில் இருந்து சுற்றுலாவுக்காக மஹியங்கனைக்கு சென்றுக் கொண்டிருந்த இளைஞன் மற்றும் யுவதி ஒருவரே இவ்வாறு மாகாவலி கங்கைக்கு நீராடச் சென்றுள்ளதாக தெரியந்துள்ளது.
மேலும் நீராடுவதற்கு தடை செய்யப்பட்ட பகுதியில் நீராடியதன் காரணமாகவே குறித்த யுவதி உயிரிழந்துள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மஹியங்கனை பொலிஸார் முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments: