இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 52,972 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதுடன்,771 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த பல்வேறு சுகாதார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், தினந்தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை மேலும் தெரிவித்துள்ளது.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றால்  பாதிக்கப்பட்டள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை  18,03,695 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 38,135 உயரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: