நாடு திரும்பிய இலங்கையர்கள்
கொரோனா தொற்றுப் பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கியிருந்த சுமார் 306 இலங்கையர்கள் நாட்டிற்கு வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஓமான் மற்றும் சீனா ஆகிய நாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்கள், சீனாவின் ஷங்காய் விமான நிலையத்திலிருந்து கட்டுநாயக்க விமானநிலையம் நோக்கிப் பயணித்த எம் யூ 231 எனும் விமானம் ஊடாக இலங்கையர்கள் 10 பேர் அழைத்து வரப்பட்டுள்ளதுடன் ஓமான் மஸ்கட் நகரில் இருந்து பயணித்த யு எல் 206 விமானம் ஊடாக 296 இலங்கையர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த அனைவரும் விமான நிலையத்தில் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments: