இந்தியாவில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை

இன்று காலை நிறைவடைந்ந 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுக்குள்ளான  52,050 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு இதுவரையில் மொத்தமாக 1,855,000 கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நேற்றைய தினம் இந்தியாவில் 803 பேர் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதோடு இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி மொத்தமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38,938 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இந்தியாவில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12 இலட்சத்து 30 ஆயிரம் ஆக காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.


No comments: