மத்திய மலைநாட்டில் சீரற்ற காலநிலை

மத்திய மலை  நாட்டில் சீரற்ற காலநிலையுடன் இடைக்கிடையே மழையுடன் கடும் காற்று  வீசி வருவதுடன் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது.இதனால் சாரதிகள் அவதானமாக தங்களுடைய வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்துப் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் மலையகத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் அடைமழை காரணமாகவும் கடும் குளிர் காரணமாகவும் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்புக்குள்ளாகி இருப்பதோடு பல இடங்களில் மண்சரிவு அபாயமும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.எனவே மக்கள் மிகவும் அவதானமாக இருக்குமாறு இடர் முகாமைத்தவ மத்திய நிலையம் அறிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: