சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை

கொரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் இன்று இடம்பெறும் 2020இற்கான பாராளுமன்றத் தேர்தல் வாக்களிப்பு  இன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை இடம்பெறவுள்ளது.

சுகாதார பாதுகாப்பு தொடர்பில் எவ்வித அச்சமும் கொள்ளத் தேவையில்லை.இது தொடர்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு தேவைப்படும் பட்சத்தில் மேலதிக பொலிஸாரையும் அழைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்  தலைவர் மஹிந்த தேசப்பிரிய  தெரிவித்துள்ளார்.

மேலும் தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்களை உடனடியாக வீடியோ மூலம் பார்வையிடுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும், அதன்படி அனைத்துப் பொலிஸ் பிரிவுகளுக்கும் கெமராக்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

No comments: