மாத்தளை-கண்டி இடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தம்
மாத்தளை-கண்டி நகரங்களுக்கு இடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுகஸ்தோட்ட மற்றும் வத்தேகம பகுதிகளுக்கிடையிலான ரயில் மார்க்கத்தில் சடலமொன்று காணப்படுவதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக இரண்டு புகையிரத சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: